Software Developer's Life Cycle

A perspective from the ordinary

சீனாவின் Operation முத்து மாலை

தினம் தினம் பத்திரிக்கையை விரித்தால், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுவல், அச்சுறுத்தல், என்று கொட்டை எழுத்துகளில் நெஞ்சை பதைக்க செய்யும் செய்திகள் சரளமாக கிடைக்கும் இந்த நேரத்தில், ஒயிலாக நம் தலைக்கு மேலேயே உட்கார்ந்து கொண்டு காய் நகர்த்தி கொண்டிருக்கும் சீனாவை பற்றிய இந்த துகிரிலிரியும் பதிவை காண நேர்ந்தது.

அவற்றில் இருந்து சில கருத்துகள்:

வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா.

Hainan-full இந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், ‘முத்து மாலை’. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீனாவின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.

சீனாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் வழிக்கும், வங்க தேசம் மற்றும் மியான்மர் துறைமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதனால், இந்தத் துறைமுக அபி விருத்திப் பணி மேற்கொள்வது இந்தியா-வுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்று சந்தேகிக்கப்படு கிறது.

இந்த பகீரத செய்தியை பற்றி விரிவாக படிக்க, இங்கே சுட்டவும்:Tamil SKY News. இந்திய அரசாங்கம் துரிதமாக காரியமாற்றி இந்த பிரச்சனைக்கு அரசியில் ரீதியான தீர்வு காணும் என்பதே என் அவா.

டிஸ்கி: அந்த வலை பக்கத்தில் இருக்கும் ஒரே வருத்தம், இப்படி பட்ட பேராபத்தை உருவாக்கி கொண்டிருக்கும் சீனாவை பற்றி பாராட்டி சில புல்லுறுவீகள் இட்டு இருக்கும் பிண்ணூட்டங்களே.

எப்போது தான் தீருமோ, மனிதனை மனிதனே வெறுக்கும் கொடிய நோய்.

June 5, 2009 Posted by | India, World News | Leave a Comment

   

Follow

Get every new post delivered to your Inbox.